Monday, January 17, 2022
HomeTamil Eventsகவிமணம் 2017 -கவிதைப் போட்டி

கவிமணம் 2017 -கவிதைப் போட்டி

தமிழ் மொழி விழாவையொட்டிச் சிங்கப்பூர் இந்தியர் சங்கம் படைக்கும் கவிதைத் திறன் போட்டி
கவிமணம் 2017 சிங்கப்பூர்வாழ் அனைத்துக் கவிஞர்களையும் அழைக்கின்றது!

கவிதைப் போட்டிக்குரிய தலைப்பு: “காதலென்றால்…”

போட்டிக்குரிய தலைப்பு அனைவர்க்கும் ஏற்புடைய பரந்துபட்ட பொருளுடையதாக அமைந்துள்ளது. .

. தமிழ்மொழி வளர்ச்சிக்கும் பயன்பாட்டுக்கும் உறுதுணையாக இருக்கும் தமிழ்மொழி விழாவுக்கு இக்கவிதைப் போட்டி வளம் சேர்க்கும் என்பது உறுதி.

போட்டி இரண்டு பிரிவுகளைக் கொண்டிருக்கும்:

1. சிங்கப்பூரர்களையும் நிரந்தர வாசிகளையும் உள்ளடக்கியது

2. சிங்கப்பூரில் படிக்க / வேலை செய்ய அனுமதி பெற்ற வெளிநாட்டினரை உள்ளடக்கியது.

. கவிமணம் நிகழ்ச்சி வரும் ஏப்ரல், வெள்ளிக்கிழமை 7ஆம் தேதி, இரவு 7.00 மணிக்கு, 69 பாலஸ்டியர் ரோடு, சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தில் நடைபெறும். அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் படிக்கப்படும்.நடுவர்களால் தேர்வு செய்யப்படும் சிறந்த ஐந்து கவிதைகளுக்கு ஒவ்வொரு பிரிவிலும் ரொக்கப் பரிசுகள், முறையே $1000, $700, $500 $300 $200 என வழங்கப்படும்.

கவிதைகள் 12 வரிகளுக்குக் குறையாமலும் 20 வரிகளுக்கு மிகாமலும் அமைதல் வேண்டும். போட்டியில் பங்கேற்போர் ஒரு கவிதை மட்டுமே அனுப்ப வேண்டும்.

கவிதைகள் தமிழில் kavimanam@sg-ia.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். கவிதைப் பக்கங்களில் வேறெந்த விவரங்களும் எழுதக் கூடாது. தங்கள் பெயர், அடையாள / அனுமதி அட்டை எண், தொலைபேசி எண், ஆகிய விவரங்களை மின்னஞ்சலில், ஒரு தனிப்பக்கத்தில் தர வேண்டும். அனுப்ப வேண்டிய இறுதி நாள் 10 மார்ச் 2017

Vijay Sangarramuhttp://kelirr.com
சிங்கப்பூரில் உள்ள தனியார் வங்கியில் கணிப்பொறி நிபுணராக பணிபுரிபவர். சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் ‘தி சிராங்கூன் டைம்ஸ். மாத இதழில் சில கட்டுரைகள் எழுதியுள்ளவர், குறும்படம் இயக்குதல் , புகைப்படம் மற்றும் காணொளி தொகுப்பில் ஆர்வம் உடையவர்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular